Blogger indli vote button

Saturday, October 15, 2011

"அம்புலி 3D" திரைப்பட அனுபவங்கள் -  பகுதி 05
                                                         



இசையின் உண்மையான முகத்தை அப்பொழுது இரண்டு இயக்குனர்களும் எடுத்துரைக்க....ஒரு நாள் இசை ஞானம் எனக்குள்ளும் வரும் என்ற நம்பிக்கை நாளாக நாளாக வளர ஆரம்பித்தது. கரிக்கடை பாய் வீட்டுக்கு பக்கத்து வீட்ல இருந்து நான் என் வீட்டை காலிப் பண்ணிட்டேன். ( அட அதாங்க என் IPOD -ல இருந்த குத்துப் பாடல்களையும்
HERO Introduction பாடல்களையும் Delete செய்து விட்டேன்.)



அடுத்த கட்ட தேர்தல்

அதே Location hunt trip -ல் அம்புலியில் எனக்கான வேலைப் பற்றியும் மற்ற Asst Directors -க்கிட்ட எப்படி வேலையைப் பிரித்து கொடுத்து Supervising செய்வது பற்றியும் எனக்கு சொல்லிக் கொடுக்கப் பட்டது.

அதாவது Leading post -ல் இருப்பவர் எப்படி வேலைகளை முந்திக்கொண்டு செய்வது என்று ஆழியார் அணைக்கு Location பார்க்க செல்லும்பொழுது Directors சொன்னாங்க.

நான் முந்திக்கொண்டு வழிநடத்தி வேலைகளை பெறும் முதல் வாய்ப்பும் வந்தது.

அன்று பாடல் பதிவு.

 மெலோடி பாடலான நெஞ்சுக்குள்ள யாரு.... நேரில் வந்ததாரு.....
சின்மயி குரலில் பதிவு செய்யப்பட்ட தினம்.

முதல் நாள் இரவு நான் செங்கல்பட்டில் உள்ள என் வீட்டிற்க்கு சென்றுவிட்டு மறுநாள் காலை  நேராக Pal X Studio -ற்கு வந்துக் கொண்டிருக்கையில்  Haresh அண்ணாவிற்கு அவசர அவசரமாக ஒரு SMS செய்து அனுப்பிவிட்டு ஓட்டமும் நடையுமாக மூச்சு வாங்க Studio -வை நெருங்க அப்பொழுது பாடகி சின்மயி Studio விலிருந்து வெளியே வந்த்தைக் கண்டதும் எனக்கு பகீரென்றது.

" ஐயோ Song Recording முடிஞ்சடுச்சா ?"

Studio -ன் உள்ளே சென்ற என்னை இயக்குனர்கள் பார்த்தார்கள்...........!

ஒருவேளை இயக்குனர்களின் Advice -படி அன்று Song Recording ல் நான் நடந்துக்கொண்டிருந்தால் என் கையில்......

-Handy cam இருந்திருக்க வேன்டும்....
-Lyrics printout இருந்திருக்க வேன்டும்....

ஆனால் என்னிடம் லேட்டாக வந்ததுக்கு காரணம் மட்டுமே இருந்தது.

---------------------------------------------------------------------------------------------------------------------------

அப்பொழுது தான் நான் அனுப்பிய SMS Haresh அண்ணன் மொபைலுக்கு
வந்தது.

Hi Anna Today mrng song recordingil nan enna velai seidhu iruka vendum. plz reply me.

மறக்க முடியாத SMS....

சில சம்பவங்கள் நம்மையே நமக்கு அடையாளம் காட்டும்....

No comments:

Post a Comment