Blogger indli vote button

Saturday, October 15, 2011

"அம்புலி 3D" திரைப்பட அனுபவங்கள் -  பகுதி 05
                                                         இசையின் உண்மையான முகத்தை அப்பொழுது இரண்டு இயக்குனர்களும் எடுத்துரைக்க....ஒரு நாள் இசை ஞானம் எனக்குள்ளும் வரும் என்ற நம்பிக்கை நாளாக நாளாக வளர ஆரம்பித்தது. கரிக்கடை பாய் வீட்டுக்கு பக்கத்து வீட்ல இருந்து நான் என் வீட்டை காலிப் பண்ணிட்டேன். ( அட அதாங்க என் IPOD -ல இருந்த குத்துப் பாடல்களையும்
HERO Introduction பாடல்களையும் Delete செய்து விட்டேன்.)அடுத்த கட்ட தேர்தல்

அதே Location hunt trip -ல் அம்புலியில் எனக்கான வேலைப் பற்றியும் மற்ற Asst Directors -க்கிட்ட எப்படி வேலையைப் பிரித்து கொடுத்து Supervising செய்வது பற்றியும் எனக்கு சொல்லிக் கொடுக்கப் பட்டது.

அதாவது Leading post -ல் இருப்பவர் எப்படி வேலைகளை முந்திக்கொண்டு செய்வது என்று ஆழியார் அணைக்கு Location பார்க்க செல்லும்பொழுது Directors சொன்னாங்க.

நான் முந்திக்கொண்டு வழிநடத்தி வேலைகளை பெறும் முதல் வாய்ப்பும் வந்தது.

அன்று பாடல் பதிவு.

 மெலோடி பாடலான நெஞ்சுக்குள்ள யாரு.... நேரில் வந்ததாரு.....
சின்மயி குரலில் பதிவு செய்யப்பட்ட தினம்.

முதல் நாள் இரவு நான் செங்கல்பட்டில் உள்ள என் வீட்டிற்க்கு சென்றுவிட்டு மறுநாள் காலை  நேராக Pal X Studio -ற்கு வந்துக் கொண்டிருக்கையில்  Haresh அண்ணாவிற்கு அவசர அவசரமாக ஒரு SMS செய்து அனுப்பிவிட்டு ஓட்டமும் நடையுமாக மூச்சு வாங்க Studio -வை நெருங்க அப்பொழுது பாடகி சின்மயி Studio விலிருந்து வெளியே வந்த்தைக் கண்டதும் எனக்கு பகீரென்றது.

" ஐயோ Song Recording முடிஞ்சடுச்சா ?"

Studio -ன் உள்ளே சென்ற என்னை இயக்குனர்கள் பார்த்தார்கள்...........!

ஒருவேளை இயக்குனர்களின் Advice -படி அன்று Song Recording ல் நான் நடந்துக்கொண்டிருந்தால் என் கையில்......

-Handy cam இருந்திருக்க வேன்டும்....
-Lyrics printout இருந்திருக்க வேன்டும்....

ஆனால் என்னிடம் லேட்டாக வந்ததுக்கு காரணம் மட்டுமே இருந்தது.

---------------------------------------------------------------------------------------------------------------------------

அப்பொழுது தான் நான் அனுப்பிய SMS Haresh அண்ணன் மொபைலுக்கு
வந்தது.

Hi Anna Today mrng song recordingil nan enna velai seidhu iruka vendum. plz reply me.

மறக்க முடியாத SMS....

சில சம்பவங்கள் நம்மையே நமக்கு அடையாளம் காட்டும்....

Wednesday, October 12, 2011

"அம்புலி 3D" திரைப்பட அனுபவங்கள் -  பகுதி 04

                                                        
                                                                          இசை


 
இங்குதான் எனக்கான காட்சி ஆரம்பம்... பாடல் ஒலிப்பதிவிற்கு முன் Locations வேட்டைக்காக ஊட்டி, கோவை, பொள்ளாச்சி, மேட்டூர் என பல ஊர்களுக்கு சென்று வந்தோம். பயணிக்க தொடங்கி பேச்சு எங்கெங்கோ சென்று ஒரு நாள் ஊட்டி மலைப்பாதையில் எங்களது வேன் சென்றுக்கொண்டிருக்கும்போது Harish அண்ணா என்னிடம் கேட்டார் '' இனக்கு ரிதம் பிடிக்க தெரியுமா என்று ? ''

அது வரையில் வேனில் சத்தமாக ஒலித்துக் கொண்டிருந்த பாட்டு சல வினாடிகள் எனக்கு மட்டும் Mute ஆனது போல் இருந்தது.

நான் : ரிதம் பிடிக்கிறதுன்னா?...
(ஐயோ இதுவரையில் கேட்டிராத கேள்வி...)

தெரியாதுண்ணா........

Harish அண்ணன் : கத்து வச்சிக்கோ தினேஷ்.... Director க்கு இதெல்லாம்           கண்டிப்பா  தெரியனும். தெரியாம நீ எப்படி படம் பண்ணுவ?..... Music directors கிட்ட எப்படி Songs கேட்டு  வாங்குவ.... சீக்கிரம் கத்துக்கோ....

எனக்கு கொஞ்ச நேரத்துக்கு எதுவுமே புரியல. 2005 ல Cine Field-க்குள்ள வந்தேன். இதுவரைக்கும் எனக்கு இசை பத்தி Knowledge கிடையாது.

Hari அண்ணன்:  இங்க பாரு... ரிதம் பிடிக்கிறது ஒண்ணும் பெரிய                  விஷயமில்ல. எந்த Song-அ நீ கேட்டாலும் அது beat-படிதான் Play ஆகும். ஒவ்வொரு Song-லயும் ஒவ்வொரு விதமா              ரிதம்..................................................................................................                                            ..............................................................................................................
..............................................................................................................
Hari அண்ணன் சொல்லிக்கொண்டிருக்கும் போது என் உள்ளுக்குள் மனதில் பயம் ஏக்கர் கணக்கில் பரவ ஆரம்பத்தது விட்டது.

Music -ல நாம எப்டினு சொல்லனுமே உங்களுக்கு..... ஆங்....
சரியா சொல்லனும்னா அந்த கரிக்கடை பாய் இருக்காரே....
அதாங்க அவர்தான்......

                                     ''நின்னுக்கோரே.... வர்னும்..... வர்னும்.......''

அவர் வீட்டுக்கு பக்கத்து வீடுதான் நம்மளது......Locations Trip முடியற வரைக்கும் எனக்கு மட்டும் தனியாக பாடல் ஒலித்தது போல் இருந்தது. ஒவ்வொரு முறையும் பாடலில் ரிதம் தேடி அலைய ஆரம்பித்தேன்.

Sunday, October 9, 2011

"அம்புலி 3D" திரைப்பட அனுபவங்கள் -  பகுதி 03 

 
மாட்டிக்கொண்ட asst directer -க்கு சற்று வித்தியாசமான தண்டனை தரப்பட்டது. உடனடியாக அந்த asst director ஒரு short film concept சொல்ல வேண்டும்... அதை அவனே direct செய்ய வேண்டும். Team-க்குள்ளேயே Editor, director, Actor, Cameraman  என எல்லோரும் இருப்பதால் சுலபத்தில் தப்பிக்க முடியாது.

பின் அந்த assistant கதை சொல்லி short film எடுக்கறதெல்லாம் ஒரு பக்கம். அம்புலி குழு (அட... அதான் ஆரம்பிச்சாச்சுல.... crew- க்கு பேரே இனி அம்புலிதான்.) சென்னை திரும்பியது. சென்னையில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் வீட்டுக்கும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் வீட்டுக்கும் நடுவில் அம்புலி Office போடப்பட்டது.
                                                     (என்ன combination பாருங்க....)

காட்சிகள் ஒவ்வொன்றாய் ஆரம்பித்தன. பாடல் வரிகளுக்கு நா.முத்து குமார், கவிஞர் தாமரை, நெல்லை ஜெயந்தா, பாப் ஷாலினி ( Fairwell Song-ல் வருகிற ஆங்கில வரிகள்) இசைக்கு வெங்கட்பிரபு ஷங்கர், சாம் CS, சதீஷ்,மெர்வின் என 4 இசையமைப்பாளர்கள், ஆடை வடிவமைப்புக்கு திரு பாபு, கலை ஆக்கத்திற்கு திரு ரெமியன் அவர்களும் சண்டைப் பயிற்சிக்கு திரு ரமேஷ் மாஸ்டர் அவர்களும் என அம்புலியை தோளில் சுமக்க சேர்ந்துக்கொண்டனர்.

இப்படி டெக்னிஷியன் பட்டாளம் தயாராகி விட்டது. எல்லாம் சரி....
அம்புலிக்காக இவர்கள் சேர்ந்துக்கொண்டனர். படத்தில் அம்புலியாக சேரப்போவது யார்? கதையின் நாயகன், வில்லன், Entertainer என பல பரிமானங்கள் கொண்ட அம்புலி Charecter -ஐ ஏற்கப்போவது யார் என்ற தேடல் படலம் தொடங்கி விட்டது.

ஒளிப்பதிவாளர் சதீஷ் அம்புலியை அடையாளம் காட்டினார். அவரைப் பார்த்ததும் எங்களுக்கு நம்பிக்கை பிறந்தது. அம்புலி கதாப்பாத்திரத்தை தாங்க கூடிய சரியான நபர்... ஆனால் அவ்வளவு சுலபத்தில் நெருங்க முடியவில்லை...

அவர்.......................................................................

-------------------------------------------------------------------------------------------------------------

"அம்புலி 3D" திரைப்பட அனுபவங்கள் பகுதி 04 -ஐ படிக்க இங்கே க்ளிக் செய்யவும். 

Saturday, July 9, 2011

"அம்புலி 3D" திரைப்பட அனுபவங்கள் - பகுதி 02

"அம்புலி 3D" திரைப்பட அனுபவங்கள் -  பகுதி 02

காதல் ...


கதையில்லாத assistant directors இருக்காங்களோ இல்லையோ தெரியாதுங்க.... ஆனா காதல் இல்லாத assistant directors எனக்கு தெரிஞ்சி கிடையாதுங்க....  
(என் மனசாட்சி :-நீ மட்டும் யோக்கியம்... நான் :- நாம அப்புறமா பேசலாம்ப்பா நான் இந்த blog-அ போஸ்ட் பண்ணிட்டு வரனே plz..) அப்படித்தான் அம்புலி team லயும்..எப்ப பாத்தாலும் sms ஓ.. இல்ல "ஆமா.. ம்.. அப்புறம்....சொல்லு’’னு ஒரு assistant நம்ம Office compound gate கிட்டப் தனியாப்போய் சிரிச்சுக்கிட்டு நிப்(பேங்க)பாங்க.

So இந்த 3 problems-அ தற்காலிகமா தள்ளி வைக்க directors 
யோசிச்சாங்க... யோசிச்சாங்க... யோசிச்சாங்க...
சொன்னாங்க... "கெளம்பங்கடா வேலூர்க்கு...''
" அதுக்கு முன்னாடி Meeting வச்சு சொன்ன condition(கட்டளை) இதுதான்,
"வேலூர் போனதும் No chating no phone calls....."

நம்ம Assistants தனியா ஒரு Meeting போட்டு இப்டிதான் பேசிக்கிட்டாங்க 

"ச்ச.. என்னப்பா.. இதல்லாம் நியாயமே இல்ல...பேசக்கூடாதுன்னா எப்டி?...
So நாம நமக்குள்ள ஒரு agreement ............................................................!"
என்னிக்கு return- னு சொல்லாம Dress-அ pack பண்ணிக்கிட்டு first batchஆன Hari sir,Haresh sir, Ajay, Kamal அப்புறம் நானென,ஒரு 5 பேர்
கொண்டகுழு கிளம்பிட்டோம். பேருந்துப்பயணம்...சுவாரஸ்யமா பேசிக்கிட்டே கிளம்பிட்டோம்.வேலூர்ல Hariஅண்ணா வீட்ல தான் discussion.

Haresh அண்ணா (directors -அ நாங்க கூப்பிடறது அண்ணா.. sir... Boss..3 விதமா.. moodக்கு ஏத்த Mix...) 

Script -அ one line order படி, Haresh அண்ணா சொல்லச் சொல்ல ஒவ்வொரு scene -ஆ விவாதிக்க ஆரம்பிச்சோம். விவாதங்களில் சில சில கோபங்கள், ஆதங்கங்கள், பல சந்தோஷங்கள்னு தீவிரமா discussion நடந்துக்கிட்டுருக்கும் போது, Camara man sathish அண்ணா,Music director Prabu அண்ணா,  Srijith, Hussain, Lokesh, Lokeshwaran -னு team members எல்லோரும் வந்து சேர்ந்துக்கிட்டாங்க. விவாதங்களில் ஆலோசனைகளின் எண்ணிக்கை கூடியது.  எங்க (சினிமா) style ல இத சொன்னா  

‘’Cut பண்ணி open பண்ணா’’
Script ரெடிங்க. 

சரியா 7,8 நாளைக்கு அப்புறம் discussion முடிஞ்சிடுச்சு. எல்லோருக்கும் முழு திருப்தி. எங்க team-க்கு ஒரு பழக்கமிருக்கு. எப்போலாம் நாங்க ஒண்ணுக்கூடி Meeting ஓ இல்ல ஏதாவது ஒரு வேலைய முடிச்சோம்னா.. அப்டியே கிளம்பிப்போய் தியேட்டர்ல சங்கமிச்சிடுவோம். அன்னிக்கும் அப்டிதான்.. 

மறுபடியும் எங்க பாஷைல சொன்னா 

 ‘’Cut பண்ணி open பண்ணா’’ 
தியேட்டர்..  

படம் பாத்துட்டு பாப்கார்ன் சாப்பிட்டு அதோட விட்டுட மாட்டாங்க Directors.அந்த படமே ரெண்டேகால் மணி நேரம்தா இருந்திருக்கும்... ஆனா அந்த படத்தப்பத்தி  5 மணி நேரம் கூட some times discuss பண்ணுவோம். So அன்னிக்கும் அப்படித்தான்.. பாத்த படத்த பத்தி discuss பண்ணிட்டு தூங்க போயாச்சு. 

நைட் 3 மணி. மாடில ஏதோ சத்தம்.. 
எனக்கு மட்டும் கேட்டுச்சு..   

கண் விழிச்சுப் பாத்தாக்கா எல்லாரும் செம தூக்கத்துல இருக்காங்க. 
கண்ண மூடிக்கிட்டு ஆழ்ந்து கேட்டாக்கா சத்தம் நல்லா கேக்குது... என்னனுதா பாக்கலாமேனு தைரியத்த வரவச்சிக்கிட்டு மாடிப்படியில ஏற ஆரம்பச்சேன். திகிலான நொடிகள்.. மாடிக்கும் வந்தாச்சு. யாரையும் காணோம்.இப்போ பயங்கர நிசப்தம்... 

Again a voice... 
அதேதான்...

“ஆமா.. ம்.. அப்புறம்....சொல்லு’’ 

அடப்பாவி... 
conditiona மீறி ஒரு assistant director..Sofa ல படுத்துக்கிட்டு ஆகாயத்துல பறந்துக்கிட்டுருக்கான்...
-------------------------------------------------------------------------------------------
                                                                                                                                                        அனுபவங்கள் தொடரும்...

Friday, July 1, 2011

"அம்புலி 3D" திரைப்பட அனுபவங்கள் -  பகுதி 01

வணக்கம் நண்பர்களே...
நான் தினேஷா...

அம்புலி திரைப்படத்தில் துணை இயக்குனராக பணிபுரிந்துக் கொண்டிருக்கின்றேன்.

அம்புலி திரைப்படத்தின் திரைக்குப் பின்னால் நடந்த சில சுவாரஸ்யமான நிகழ்வுகளை உங்களுடன் பகிர்ந்துக்கொள்ள கிடைத்த சந்தர்ப்பம் இது.


ஒரு திரைப்படம் உருவாக திரைப்பட பணியை 3 பிரிவுகளாகப் பிரிப்பர்...
1. Pre production
2. Production
3. Post production
எனவே சுவாரஸ்யமான அனுபவங்களை Pre production
எனும் முதல் தளத்திலிருந்தே விவரிக்க விரும்புகிறேன்.

Pre production - ல் கதை விவாதம் என்பது திரைப்பட குழுவில்
நடக்கும் முதல் முக்கிய நிகழ்வு ஆகும் என்பது உங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும்.

ஆக கதை விவாதத்திலிருந்தே ஆரம்பிக்கிறேன்.

அம்புலி படத்திற்கான கதையை இயக்குனர்கள் எப்பொழுது சொன்னார்கள் என்பது சரியாக நினைவில்லை.( மன்னிக்க.. அப்படி தேதி வாரியாக சொல்லவேண்டுமெனில் என் dairy -யை பார்த்துதான் சொல்ல வேண்டும்.) ஆனால் கதையைக் கேட்டப்பொழுது கதையில் நிறைய சவால்கள் காத்திருப்பது தெரிந்தது. கதையில் எனக்கும், சக உதவி இயக்குனர்களுக்கும் ஏற்பட்ட சந்தேகங்களுக்கு எங்கள் இயக்குனர்கள் பொறுமையாக பதிலளித்து கதை விவாதம் தொடங்கிற்று.அம்புலி கதையைக் கேட்டபொழுது மனதிற்குள் உண்மையாகவே ‘திருப்தி’ கிடைத்தது. திருப்தி என்று ஏன் சொல்கிறேன் என்றால் ஒரு இயக்குனர் தன் உதவி இயக்குனர்களை கூப்பிட்டு ‘அதோ பாருங்கடா வெள்ளைக் காக்கா’ என்று சொல்வாராயெனில், உதவி இயக்குனர்கள் ‘ஆமா சார் அது வெள்ளைக் காக்காதான்’ என்று கூறும் சூழ்நிலைதான் (எனக்கு தெரிந்தவரை) நம் இந்தியசினிமாவில் திரைக்குப் பின்னால் நிலவுகிறது.

ஆனால்...

‘என்னமோ ஏதோ...’ சொல்வது Director ஆயிற்றே... ‘கதை சூப்பர் சார்...’ என்கிற நிலைமை SHANKAR BROS ல் கிடையாது என்பதை நான் உதவி இயக்குனராகவும் பின் இப்பொழுது துணை இயக்குனராகவும் நெஞ்சை நிமிர்த்தி பெருமையுடன் சொல்லிக்கொள்கிறன்.

ஆனால் சென்னையில் கதை விவாதத்தை தொடர்ந்து வைத்துக்கொள்வதில், நேரத்தை கையாள்வதில் என அனைவருக்கும் ஒருங்கிணைந்த நேரம் கிடைப்பதில் சில சிக்கல்கள் ஏற்ப்பட்டது.

1. இயக்குனர் ஹரி Director come editor என்பதால் சில Other Project ல் நேரம் செலவிட வேண்டியிருந்தது.

2. இயக்குனர் ஹரிஷ் திருநின்றவூர் எனும் பக்கத்து நாட்டிலிருந்து நம் நாடான தி.நகருக்கு தன் Two wheeler-ல் வந்து போவதில் சில மணி நேரங்கள் செலவிட வேண்டியிருந்தது.

3. .. .. .. .. .. .. .. .. மூணாவது Problem இருக்கே...
அது ரொம்ப கொடுமைங்க.

அதுதாங்க காதல்.. .. ..

Pre production -ல காதலா...? -னு கேக்கறீங்களா...
அட ஆமாங்க.....! 
-------------------------------------------------------------------------------------------------------
                                                                                                                     அனுபவங்கள் தொடரும்...