Blogger indli vote button
"அம்புலி 3D" படப்பிடிப்பு அனுபவங்கள்

வணக்கம் நண்பர்களே...
நான் தினேஷா...



அம்புலி திரைப்படத்தில் துணை இயக்குனராக பணிபுரிந்துக் கொண்டிருக்கின்றேன்.




அம்புலி திரைப்படத்தின் திரைக்குப் பின்னால் நடந்த சில சுவாரஸ்யமான நிகழ்வுகளை உங்களுடன் பகிர்ந்துக்கொள்ள கிடைத்த சந்தர்ப்பம் இது.


ஒரு திரைப்படம் உருவாக திரைப்பட பணியை 3 பிரிவுகளாகப் பிரிப்பர்...
1. Pre production
2. Production
3. Post production

எனவே சுவாரஸ்யமான அனுபவங்களை Pre production
எனும் முதல் தளத்திலிருந்தே விவரிக்க விரும்புகிறேன்.

Pre production - ல் கதை விவாதம் என்பது திரைப்பட குழுவில் நடக்கும் முதல் முக்கிய நிகழ்வு ஆகும் என்பது உங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும்.

ஆக கதை விவாதத்திலிருந்தே ஆரம்பிக்கிறேன்.

அம்புலி படத்திற்கான கதையை இயக்குனர்கள் எப்பொழுது சொன்னார்கள் என்பது சரியாக நினைவில்லை.( மன்னிக்க.. அப்படி தேதி வாரியாக சொல்லவேண்டுமெனில் என் dairy -யை பார்த்துதான் சொல்ல வேண்டும்.) ஆனால் கதையைக் கேட்டப்பொழுது கதையில் நிறைய சவால்கள் காத்திருப்பது தெரிந்தது. கதையில் எனக்கும், சக உதவி இயக்குனர்களுக்கும் ஏற்பட்ட சந்தேகங்களுக்கு எங்கள் இயக்குனர்கள் பொறுமையாக பதிலளித்து கதை விவாதம் தொடங்கிற்று.அம்புலி கதையைக் கேட்டபொழுது மனதிற்குள் உண்மையாகவே ‘திருப்தி’ கிடைத்தது. திருப்தி என்று ஏன் சொல்கிறேன் என்றால் ஒரு இயக்குனர் தன் உதவி இயக்குனர்களை கூப்பிட்டு ‘அதோ பாருங்கடா வெள்ளைக் காக்கா’ என்று சொல்வாராயெனில், உதவி இயக்குனர்கள் ‘ஆமா சார் அது வெள்ளைக் காக்காதான்’ என்று கூறும் சூழ்நிலைதான் (எனக்கு தெரிந்தவரை) நம் இந்தியசினிமாவில் திரைக்குப் பின்னால் நிலவுகிறது.

ஆனால்...

‘என்னமோ ஏதோ...’ சொல்வது Director ஆயிற்றே... ‘கதை சூப்பர் சார்...’ என்கிற நிலைமை SHANKAR BROS-ல் கிடையாது என்பதை நான் உதவி இயக்குனராகவும் பின் இப்பொழுது துணை இயக்குனராகவும் நெஞ்சை நிமிர்த்தி பெருமையுடன் சொல்லிக்கொள்கிறன்.

ஆனால் சென்னையில் கதை விவாதத்தை தொடர்ந்து வைத்துக்கொள்வதில், நேரத்தை கையாள்வதில்  அனைவருக்கும் ஒருங்கிணைந்த நேரம் கிடைப்பதில் சில சிக்கல்கள் ஏற்ப்பட்டது.

1. இயக்குனர் ஹரி Director come editor என்பதால் சில Other Project ல் நேரம் செலவிட வேண்டியிருந்தது.

2. இயக்குனர் ஹரிஷ் திருநின்றவூர் எனும் பக்கத்து நாட்டிலிருந்து நம் நாடான தி.நகருக்கு தன் Two wheelerல்
வந்து போவதில் சில மணி நேரங்கள் செலவிட வேண்டியிருந்தது.

3. .. .. .. .. .. .. .. .. மூணாவது Problem இருக்கே...
அது ரொம்ப கொடுமைங்க.

அதுதாங்க காதல்.. .. ..

Pre production -ல காதலா...? -னு கேக்கறீங்களா...
அட ஆமாங்க.....!
--------------------------------------------------------------------------------------------------
                                                                 அனுபவங்கள் தொடரும்.