Blogger indli vote button

Sunday, October 9, 2011

"அம்புலி 3D" திரைப்பட அனுபவங்கள் -  பகுதி 03 





 
மாட்டிக்கொண்ட asst directer -க்கு சற்று வித்தியாசமான தண்டனை தரப்பட்டது. உடனடியாக அந்த asst director ஒரு short film concept சொல்ல வேண்டும்... அதை அவனே direct செய்ய வேண்டும். Team-க்குள்ளேயே Editor, director, Actor, Cameraman  என எல்லோரும் இருப்பதால் சுலபத்தில் தப்பிக்க முடியாது.

பின் அந்த assistant கதை சொல்லி short film எடுக்கறதெல்லாம் ஒரு பக்கம். அம்புலி குழு (அட... அதான் ஆரம்பிச்சாச்சுல.... crew- க்கு பேரே இனி அம்புலிதான்.) சென்னை திரும்பியது. சென்னையில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் வீட்டுக்கும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் வீட்டுக்கும் நடுவில் அம்புலி Office போடப்பட்டது.
                                                     (என்ன combination பாருங்க....)

காட்சிகள் ஒவ்வொன்றாய் ஆரம்பித்தன. பாடல் வரிகளுக்கு நா.முத்து குமார், கவிஞர் தாமரை, நெல்லை ஜெயந்தா, பாப் ஷாலினி ( Fairwell Song-ல் வருகிற ஆங்கில வரிகள்) இசைக்கு வெங்கட்பிரபு ஷங்கர், சாம் CS, சதீஷ்,மெர்வின் என 4 இசையமைப்பாளர்கள், ஆடை வடிவமைப்புக்கு திரு பாபு, கலை ஆக்கத்திற்கு திரு ரெமியன் அவர்களும் சண்டைப் பயிற்சிக்கு திரு ரமேஷ் மாஸ்டர் அவர்களும் என அம்புலியை தோளில் சுமக்க சேர்ந்துக்கொண்டனர்.

இப்படி டெக்னிஷியன் பட்டாளம் தயாராகி விட்டது. எல்லாம் சரி....
அம்புலிக்காக இவர்கள் சேர்ந்துக்கொண்டனர். படத்தில் அம்புலியாக சேரப்போவது யார்? கதையின் நாயகன், வில்லன், Entertainer என பல பரிமானங்கள் கொண்ட அம்புலி Charecter -ஐ ஏற்கப்போவது யார் என்ற தேடல் படலம் தொடங்கி விட்டது.

ஒளிப்பதிவாளர் சதீஷ் அம்புலியை அடையாளம் காட்டினார். அவரைப் பார்த்ததும் எங்களுக்கு நம்பிக்கை பிறந்தது. அம்புலி கதாப்பாத்திரத்தை தாங்க கூடிய சரியான நபர்... ஆனால் அவ்வளவு சுலபத்தில் நெருங்க முடியவில்லை...

அவர்.......................................................................

-------------------------------------------------------------------------------------------------------------

"அம்புலி 3D" திரைப்பட அனுபவங்கள் பகுதி 04 -ஐ படிக்க இங்கே க்ளிக் செய்யவும். 

1 comment:

  1. அருமை சூடு பிடிக்கிறது.....தொடருங்கள்

    ReplyDelete