Blogger indli vote button

Wednesday, October 12, 2011

"அம்புலி 3D" திரைப்பட அனுபவங்கள் -  பகுதி 04

                                                        
                                                                          இசை


 
இங்குதான் எனக்கான காட்சி ஆரம்பம்... பாடல் ஒலிப்பதிவிற்கு முன் Locations வேட்டைக்காக ஊட்டி, கோவை, பொள்ளாச்சி, மேட்டூர் என பல ஊர்களுக்கு சென்று வந்தோம். பயணிக்க தொடங்கி பேச்சு எங்கெங்கோ சென்று ஒரு நாள் ஊட்டி மலைப்பாதையில் எங்களது வேன் சென்றுக்கொண்டிருக்கும்போது Harish அண்ணா என்னிடம் கேட்டார் '' இனக்கு ரிதம் பிடிக்க தெரியுமா என்று ? ''

அது வரையில் வேனில் சத்தமாக ஒலித்துக் கொண்டிருந்த பாட்டு சல வினாடிகள் எனக்கு மட்டும் Mute ஆனது போல் இருந்தது.

நான் : ரிதம் பிடிக்கிறதுன்னா?...
(ஐயோ இதுவரையில் கேட்டிராத கேள்வி...)

தெரியாதுண்ணா........

Harish அண்ணன் : கத்து வச்சிக்கோ தினேஷ்.... Director க்கு இதெல்லாம்           கண்டிப்பா  தெரியனும். தெரியாம நீ எப்படி படம் பண்ணுவ?..... Music directors கிட்ட எப்படி Songs கேட்டு  வாங்குவ.... சீக்கிரம் கத்துக்கோ....

எனக்கு கொஞ்ச நேரத்துக்கு எதுவுமே புரியல. 2005 ல Cine Field-க்குள்ள வந்தேன். இதுவரைக்கும் எனக்கு இசை பத்தி Knowledge கிடையாது.

Hari அண்ணன்:  இங்க பாரு... ரிதம் பிடிக்கிறது ஒண்ணும் பெரிய                  விஷயமில்ல. எந்த Song-அ நீ கேட்டாலும் அது beat-படிதான் Play ஆகும். ஒவ்வொரு Song-லயும் ஒவ்வொரு விதமா              ரிதம்..................................................................................................                                            ..............................................................................................................
..............................................................................................................
Hari அண்ணன் சொல்லிக்கொண்டிருக்கும் போது என் உள்ளுக்குள் மனதில் பயம் ஏக்கர் கணக்கில் பரவ ஆரம்பத்தது விட்டது.

Music -ல நாம எப்டினு சொல்லனுமே உங்களுக்கு..... ஆங்....
சரியா சொல்லனும்னா அந்த கரிக்கடை பாய் இருக்காரே....
அதாங்க அவர்தான்......

                                     ''நின்னுக்கோரே.... வர்னும்..... வர்னும்.......''

அவர் வீட்டுக்கு பக்கத்து வீடுதான் நம்மளது......



Locations Trip முடியற வரைக்கும் எனக்கு மட்டும் தனியாக பாடல் ஒலித்தது போல் இருந்தது. ஒவ்வொரு முறையும் பாடலில் ரிதம் தேடி அலைய ஆரம்பித்தேன்.

1 comment:

  1. 'நீ எதை தேடுகிறாயோ, அது கண்டிப்பாக உனக்கு கிடைக்கும்' என்று எங்கேயோ படித்த ஞாபகம். இந்த பொன்மொழியை என்வரையில் உண்மையென உணர்ந்திருக்கிறேன். அதனால் தேடு தினேஷ். தேடு... தேடினால் கிடைக்காதது எதுவும் இல்ல. உன் தேடல் மெய்யானால் கண்டிப்பாக கிடைக்கும்.

    -
    DREAMER

    ReplyDelete