Blogger indli vote button

Wednesday, April 28, 2010

அழகிகள்

வலைதள அன்பர்களுக்கு என் வணக்கம்.


சட்டசபையில் முதல்முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினரின் பேச்சை

'கன்னிப்பேச்சு' என்பர்.


அதைப்போலத்தான் இது என் ''கன்னிக்கதை'.

கன்னியிலிருந்தே ஆரம்பிக்கின்றேன்.

ஏதேனும் எழுத்துப்பிழையோ அல்லது இலக்கணப்பிழையோ என்னையறியாமல்

ஏற்படுமாயின் வலைதள அன்பர்கள் பெருந்தன்மையுடன் பொறுத்தருள்க.



கன்னிக்கதை



பேரூந்தில் பெரும் கூட்டம். நின்றுக்கொண்டெ பயணித்த நான்

ஜன்னலோரம் உட்கார்ந்த அவளை கண்களால் சிறிது நேரம்

கைது செய்தது மணிக்கு பிடிக்கவில்லை.


‘’ ஏண்டா என்ன டேஸ்ட்டுடா உனக்கு?. போயும்போயும் அந்த கருப்பு

ஃபிகர்தானா உன் கண்ணுல பட்டுது?.


‘’ ஏன் மச்சி... அவளுக்கு என்னடா சூப்பர் ஃபிகர்தானடா..’


‘’ டேய் மச்சான் என்னடா ஆச்சு உனக்கு? அவ அட்ட கரியா இருந்தாடா.....’


‘’ இருக்கட்டுமே அவளும் வயசு பொண்னுதான...

அவளுக்கும் பசங்க தன்ன பாக்கனும்னு ஆசை இருக்காதாடா...

இப்டி நாம கருப்பு சிவப்புனு பிரிச்சி பாக்கறதால

அந்த பொண்ணோட மனசு எவ்வளவு கஷ்டப்படும்னு

கொஞ்சம் யோசிச்சு பாருடா ’’


மணி அமைதியானான்...


எனக்கு தெரியும் இனி மணிக்கும் அவள் அழகிதான்......

4 comments:

  1. தினேஷாரே..!
    வலையுலகுக்கு "வெல்கம்"! குட்டிக்கதையா முடிச்சிட்டீங்க.. இருந்தாலும் உங்கள் (கருப்பு) 'கன்னி' முயற்சி நல்லாயிருக்கு! தொடர்ந்து நிறைய எதிர்ப்பார்க்கிறேன்.. கலக்குங்க!

    -
    DREAMER

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள் தினேசா! நல்ல ஆரம்பம்... ஆனா இது போதாது! நிறைய எதிர்பார்க்கிறேன்...

    ReplyDelete
  3. நல்லா சொன்னிங்க தினேஷ்... நிறத்தில் என்ன இருக்கு? மனசு வெள்ளையா இருந்தா போதுமே... தொடர்ந்து நெறைய பெரிய கதைகளா எழுதுங்க

    ReplyDelete
  4. ஆஹா...என்ன ஒரு பரிதாபம்? எப்படிங்ணா இப்படியெல்லாம் யோசிக்க தோணுது?

    ReplyDelete